அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி நிர்வாகம் சார்பில், குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தத்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிக்சன் வரவேற்றார். மாணவ, மாணவிகள் 225 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் கல்வி உபகரணங்களை உறவின்முறை நிர்வாகிகள் வழங்கினர். விழாவில், கல்லூரி செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன், கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.