அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம்
கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற செயலாளர் மகேஷ் பாலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முத்து மாரியப்பன், குமார், இந்து ராஜ், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வேலாயுதபுரம் கிளை தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜின்னிஷா பேகம், குழந்தைகள் நல பணியாளர் சமீனா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை ஜோதி காமாட்சி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர். மகாலிங்கம் நன்றி கூறினார்.