கல்வி விழிப்புணர்வு முகாம்
புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலாம்பிகா தலைமை தாங்கினார். அமெரிக்கா ஓரேகான் மாகாண தமிழ்ச்சங்க இயக்குனரும், பிரைம் ரியாலிட்டி குரூப் ஆப் நிறுவனங்களின் உரிமையாளருமான விசுவநாதபேரி அ.ஆனந்தன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மாணவிகள் எப்படி சிறந்த முறையில் பயில வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.