அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.

Update: 2023-08-15 18:51 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி ஒன்றியம் மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெகதா தலைமையிலும், மானூர் ஊராட்சி மன்றத் தலைவர் மங்களம் முன்னிலையிலும் நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவ-மாணவிகள், அனைவரும் பள்ளிக்கு கல்விச்சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா முடிவில் பட்டதாரி ஆசிரியர் நீராத்திலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்