அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

Update: 2023-08-19 17:58 GMT

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிளஸ்-1 பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமை தாங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த 13 மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் காசோலையை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்