சேரன்மாதேவி:
பொருநை நதி பார்க்கணுமே எனும் கல்வித் திட்டத்தின் தொடக்கவிழா திருப்புடைமருதூரில் நடைபெற்றது. இத்திட்டத்தினை அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலர் ரோகிணி நிலகானி தொடங்கி வைத்தார். சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளி மாணவர்கள் 25 பேர் பங்கேற்றனர். இதில் பொருநை நதி பார்க்கணுமே எனும் களப்பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் அசோகா நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சுபத்ரா தேவி, சேஷாத்திரி, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர் கோமதி சங்கர், ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.