120 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்

Update: 2023-02-07 16:34 GMT

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்ட 39 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை வழங்கிடும் அடையாளமாக 12 மாணவ, மாணவியர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, செல்வி அபூர்வா, ம. கோவிந்த ராவ், எச்.டி.எப்.சி வங்கி தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ் வங்குரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.   

Tags:    

மேலும் செய்திகள்