கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளிடமிருந்து 2022-2023-ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.