சிலுவம்பாளையம் முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

Update: 2023-02-05 19:30 GMT

எடப்பாடி:-

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் காவிரி கரை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 51 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோருடன் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் சிலுவம்பாளையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்