எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5ம் தேதி அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5ம் தேதி அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 5.7.2023 - புதன் கிழமை காலை 9 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.