டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார்.

Update: 2022-07-24 09:06 GMT

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜனதா மேலிடம் அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிலும் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார். அதாவது நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், முக்கியமாக டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்