பாஜகவை தோற்கடிக்க எடப்பாடி பழனிசாமி சதி செய்கிறார் - டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்கிறார்.

Update: 2022-11-20 16:04 GMT

சென்னை,

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக அமமுக. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டி உள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:

நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது உதவிகரமாக இருந்த கட்சியை,(பாஜகவை) இன்றைக்கு, உதாசீனபடுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அவர்கள்(பாஜக) ஜெயிச்சா என்ன, தோற்றால் என்ன, இன்னும் சொல்லப் போனால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்க சதி செய்கிறார்கள்.

2017 ஆண்டு என்னை பன்னீர் செல்வம் சந்தித்த போது, முதலமைச்சராக ஆதரவு அளித்தேன். ஏனென்றால் அவர்( எடப்பாடி பழனிசாமி) தப்பான பாதையில் போகிறார் என்று தெரிவித்தேன். பன்னீர் செல்வம் கோபத்தில் எனக்கு எதிராக தவறான முடிவை எடுத்தார். தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்தார். பழைய நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு. எங்களை தவறானவர்கள் என்று நினைத்து செய்தார்களா அல்லது எடப்பாடி பழனிசாமியை நல்லவர் என்று நினைத்து செய்தார்களா என்பது எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்