தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மக்கள் அச்சமின்றி வாழும் வகையில்: தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
சென்னை,
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாய் திகழ்ந்தது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆனால் இந்த தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகம் போதை பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது.
கடந்த வாரத்தில், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. தமிழகத்தில் போதை பொருள் கலாசாரம் போன்று, வெடிகுண்டு கலாசாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது.
எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க. அரசு, வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.