சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது மேல் சட்டையை கழற்றிவிட்டு தலைப்பாகை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2024-01-22 12:27 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தார்.

கோவிலுக்கு உள்ளே, தனது மேல் சட்டையை கழற்றிவிட்டு, தலையில் தலைப்பாகை அணிந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் கூறியதாவது;

"இறைவனின் மறு அவதாரமாக இருக்கும் அய்யா வைகுண்டரின் ஆசியால் தமிழகத்தில் நல்ல எதிர்காலம் உருவாகும். இங்குள்ள மக்கள் அனைவரும் நேசிக்கின்ற அய்யா வைகுண்டரின் ஆலயத்தில் வந்து தரிசனம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பினை உருவாக்கி தந்த ஆலய குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்