அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி - தொண்டர்கள் உற்சாகம்...!

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.;

Update: 2022-07-11 01:23 GMT

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் அந்த தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தெரியும்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 6.45 மணியளவில் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார்.

வீட்டில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர் பயணிக்கும் வாகனம் மீது பூக்களை தூவி அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்