'எடப்பாடி பழனிசாமியின் வேஷத்தை சிறுபான்மையினர் நன்கு அறிவார்கள்' - டி.டி.வி. தினகரன்
எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு,
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போடும் வேஷத்தை சிறுபான்மையினர் நன்கு அறிவார்கள் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"சிறுபான்மையின மக்கள் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேஷத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மையினர் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரும் தக்க பாடம் புகட்டுவார்கள்."
இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.