கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி ...!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு தலைமை நிலைய செயலாளர் என மாற்றிக்கொண்டார்.

Update: 2022-07-01 05:34 GMT

சென்னை,

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் . அதே சமயம் இரட்டை தலைமை என்பதே போதுமானது என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. இந்த சூழலில் கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதி ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அவர் கட்சியின் பொருளாளர் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றிக்கொண்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு தலைமை நிலைய செயலாளர் என மாற்றிக்கொண்டார்.

பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் பதவிகள் காலவதியாகி விட்டதாக ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலவதியாகி விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

https://twitter.com/EPSTamilNadu?s=20&t=qa2KALOQFeQ-zrllKAM-Zw

Tags:    

மேலும் செய்திகள்