சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-02-18 16:34 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் ஸ்தலம் அமையப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்