செந்தில் பாலாஜியிடம் இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இன்று காலை 9 -12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.