அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.;

Update: 2023-09-12 03:07 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது.

விசாரணைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்கக்கோரி அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு உள்பட 8 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.     

Tags:    

மேலும் செய்திகள்