பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்

குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தினார்.

Update: 2022-10-28 19:01 GMT

குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தினார்.

கண்காட்சி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை, அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் சி.பச்சையப்பன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பேராசிரியர் பரசுராமன், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

பாரம்பரிய உணவு

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பேசுகையில் அவசர காலகட்டத்தில் பாரம்பரிய உணவுகளை மறந்து, நவீன உணவுகளை உட்கொள்கிறோம். பாரம்பரிய உணவுகள் இக்காலகட்டத்தில் குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனை குறைக்க நாம் அனைவரும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். பயிர் வகைகளை அதிக அளவில் விளைவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் மீன்வளத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டது. பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு ஊர்தி கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகரமன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி, விஜியா, சத்யா, நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா, வருவாய் கோட்டாச்சியர்கள் லட்சுமி, பிரேமலதா மற்றும் விவசாயிகள், வேளாண்மைதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்