செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி
செந்துறையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நத்தம் அருகே செந்துறையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், பங்கு தந்தையர்கள் இன்னாசிமுத்து, டோனி ஆகியோர் தலைமை தாங்கி, நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் நற்கருணை வழிபாடு என 4 வகையான வழிபாடுகளை நடத்தினர்.
பின்னர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் அனைவரும் நலமுடனும், சமாதானத்துடன் வாழ வேண்டியும் கையில் மெழுகுவர்த்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.