புதிய உறைகிணறு அமைக்க பூமி பூஜை

புதிய உறைகிணறு அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2022-05-28 18:51 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி யூனியன் பள்ளக்கால் பொதுக்குடி பஞ்சாயத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் செலவில் புதிய உறைகிணறு அமைக்க பூமி பூைஜ, தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்தது. யூனியன் தலைவர் பூங்கோதை சசிகுமார் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் ராம் சந்துரு முன்னிலை வகித்தார்.

யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பள்ளக்கால், பஞ்சாயத்து துணைத்தலைவர் மனோகரன், கூனியூர் ஹமீது, பள்ளக்கால் பஞ்சாயத்து செயலாளர் கணேஷ் பெருமாள் செல்வம், ரங்கசமுத்திரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்