ஏரல்சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஊஞ்சல் சேவை
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.;
ஏரல்:
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா புதன்கிழமை நடந்தது. திருவிழா நிறைவு நாளான நேற்று வெள்ளிக்கிழமை இரவு சேர்மன் அருணாசலசாமி ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார்.