ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் குருபூஜை விழா

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் குருபூஜை விழா நடைபெற்றது.

Update: 2023-04-20 18:45 GMT

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் நேற்று 115-வது குருபூஜை விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் அமாவாசை அன்று பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கனி போன்ற பொருட்களை கோவிலில் கொடுத்தனர். அதை சமைத்து சாதம் கோவில் முன்பு குவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பகல் 11 மணிக்கு அன்னத்திற்கு சிறப்பு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பெட்டி சோறு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்