ஈரோடு மாநகராட்சியில் 8 இடங்களில் மின் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம்

ஈரோடு மாநகராட்சியில் 8 இடங்களில் மின் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம் நேற்று நடந்தது.;

Update: 2022-06-12 21:19 GMT

ஈரோடு மாநகராட்சியில் 8 இடங்களில் மின் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம் நேற்று நடந்தது.

மின் கழிவு பொருட்கள்

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் சுமார் 10 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

இவைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அந்தந்த மண்டலங்களில் உள்ள பயோ மைனிங் சென்டர்களுக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு மக்கும் குப்பைகள் உரமாக தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் மின் கழிவு பொருட்கள் (இ- வேஸ்ட்) மட்டும் மாநகராட்சியில் தினசரி சராசரியாக 500 கிலோ வரை சேகரிக்கப்படுகிறது.

8 இடங்களில் முகாம்

மாநகராட்சி நிர்வாகத்திடம் மின் கழிவு பொருட்களை மறு சுழற்சி செய்ய போதுமான வசதிகள் இல்லாததால், அதனை அப்புறப்படுத்த அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மூலம் வழங்கி வருகின்றனர்.

மின் கழிவு பொருட்களை தனியாக சேகரிக்கும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகம், 4 மண்டல அலுவலகம் உட்பட 8 இடங்களில் நேற்று முன்தினம் மின் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம் தொடங்கியது.

இந்த முகாம் நேற்று 2-வது நாளாக நடந்தது. மேலும் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று மின் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்