மின் சிக்கன வார விழா

மின்சார வாரியத்தின் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா நடைபெற்றது.

Update: 2022-12-20 20:19 GMT

சிவகாசி, 

சிவகாசியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா நடைபெற்றது. திருத்தங்கல் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய பகுதிக்கு சென்று மின்சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கவுன்சிலர்கள், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதனை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரி பாவநாசம் செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்