ஊராட்சி தலைவர்களுக்கு மின் ஆளுமை பயிற்சி
தியாகதுருகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு மின் ஆளுமை பயிற்சி நடந்தது.
தியாகதுருகம்:
தியாகதுருகம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தரவு மேலாண்மை மற்றும் மின் ஆளுமை குறித்த பயிற்சி முகாம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், இந்திராணி, ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு வரவேற்றார். பயிற்சியாளர்கள் சிவக்குமார், மைக்கேல் பாரதி ஆகியோர் மின் ஆளுமை மற்றும் தரவு மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், தயாபரன், வீரமணி, செல்வராஜ், சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.