மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லையில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.;

Update: 2023-06-09 20:36 GMT

நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் உள்ள மின்நுகர்வோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமை தாங்கி, மின் நுகர்வோர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்திற்கு பின்னர், மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி பேசுகையில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின்பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணியாற்ற வேண்டும். கிராமப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்