மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
செஞ்சியில்செஞ்சியில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
செஞ்சி,
மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் செஞ்சி மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு செஞ்சி மின்கோட்ட செயற்பொறியாளர் சித்ரா தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் தலைமை அலுவலக செயற்பொறியாளர் (பொறுப்பு) மதனகோபால் கலந்துகொண்டு மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாய மின் இணைப்பு மற்றும் கூட்டு பட்டாவில் இருந்து தனி மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து மின்துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி பொறியாளர்கள் ஜகன்மோகன், குமரவேல், கார்த்திக், ராஜேஸ்வரி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.