மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவில்பட்டியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

Update: 2023-02-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மேற்பார்வை பொறியாளரால் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை மறுநாள் (புதன்கிழமை) கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை, கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் முனியசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்