மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் புழுதி பறப்பதையும், மண் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும்

மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் புழுதி பறப்பதையும், மண் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-07-21 18:40 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

காற்று மாசு ஓர் உயிர்க்கொல்லி. இதனால் ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும், சென்னையில் 11 ஆயிரம் பேரும் உயிரிழக்கின்றனர். சென்னையின் மாசு புழுதியின் பங்கு 23.5 சதவீதம். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

எனவே, சென்னை மெட்ரோ ரெயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றில் புழுதி பறப்பதையும், சாலைகளில் மண் கொட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான விதிகளை மதிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்