துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் செய்யப்பட்டு அதனை சுற்றி பீமனும், துரியோதனனும் பாடல் பாடி ஒருவரையொருவர் சண்டையிட்டுகொண்டனர்.
தொடர்ந்து கட்டைக்கூத்து கலைஞர்கள் பீமன், துரியோதனன் வேடமிட்டு பீமன் துரியோதனனை கொல்லும் நிகழ்ச்சியை நடித்துக் காட்டினர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.