வாரவிடுமுறையையொட்டிகும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் வாரவிடுமுறையையொட்டி நேற்று கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.