வடகிழக்கு பருவமழையையொட்டி ஆண்டிப்பட்டி பகுதியில் உழவு பணி தீவிரம்

வடகிழக்கு பருவமழையையொட்டி ஆண்டிப்பட்டி பகுதியில் வயல்களில் உழவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-10-10 16:55 GMT

வடகிழக்கு பருவமழை வருகிற 15-ந்தேதி தொடங்க இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இதில் ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளான பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, முத்துசங்கிலிபட்டி, தெப்பம்பட்டி, வேலப்பர்கோவில் பகுதி, புள்ளிமான் கோம்பை க.விலக்கு, கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்ய தொடங்கியது.

கடந்த தென்மேற்கு பருவமழை விவசாயிகள் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் நிலங்களை உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுகிய கால பயிர்களான அவரை, சீனி அவரைக்காய் மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதற்கு நிலத்தை தயார் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்