கட்டட பணியின் போது, மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் பலி - பதைபதைக்கும் சம்பவம்

கட்டட பணியின் போது, மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர்.

Update: 2022-10-09 10:26 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டிடப் பணிக தடுப்புச்சுவர் பணிக்கு மண்ணை தோண்டும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது திடீரென இவர்கள் மீது மண்திட்டு சுவர் விழுந்தது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட் (55) வேலு (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மண் திட்டு சரிந்து விழுந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்