மழைக்காலங்களில், மின்வாரிய பணியாளர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும்

மழைக்காலங்களில், மின்வாரிய பணியாளர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும்

Update: 2022-09-07 19:54 GMT

பேராவூரணி

மழைக்காலங்களில், மின்வாரிய பணியாளர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று பேராவூரணி உதவி செயற்பொறியாளர் அறிவுரை கூறினார்.

பயிற்சி வகுப்பு

பேராவூரணி வர்த்தக கழக அலுவலக அரங்கில், மின்வாரிய பணியாளர்களுக்கு பருவமழைக் காலங்களில் மின்பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

நிகழ்ச்சிக்கு பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். உதவி மின்பொறியாளர்கள் கலாவதி, திருச்செல்வம், முருகேசன், ஹரிசங்கர், ஸ்ரீராம், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவனமுடன் பணிபுரிய வேண்டும்

பயிற்சியில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் பேசுகையில், மின்வாரிய பணியாளர்கள் மழைக்காலங்களில் பணிபுரியும்போது கவனமுடன் பணிபுரிய வேண்டும். செல்போனை தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.

நமக்கு பணி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு குடும்பமும் முக்கியம் என்பதை உணர வேண்டும். வேலையில் கவனமுடன் இருந்து உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டு நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படாத வகையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு

பயிற்சி வகுப்பில் மின்பணியாளர்கள் கையுறை, இடுப்புக்கயிறு, தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். எர்த் ராடு பயன்படுத்த வேண்டும். வீடுகளில் பொதுமக்கள் பழுதடைந்த மின் உபகரணங்களை பயன்படுத்தும்போது விபத்து ஏற்படுவதை தவிர்க்க டிரிப்பர் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆடு, மாடுகளை மின்கம்பங்களில் கட்டக்கூடாது. பழுதான மின்கம்பங்கள், தாழ்வான மின்கம்பிகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய செய்ய வேண்டும். மின்விபத்து ஏற்பட்டால் மின் விபத்துக்குள்ளானவர்களுக்கு முதல் உதவி செய்வது எப்படி என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பில் ஆக்க முகவர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், கேங்க்மேன், வயர்மேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்