விலை வீழ்ச்சியால் வீதி, வீதியாக விற்பனைக்கு வந்த தக்காளி

வடகாடு பகுதியில் விலை வீழ்ச்சியால் வீதி, வீதியாக சரக்கு வேனில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.;

Update:2023-09-16 23:55 IST

விலை வீழ்ச்சி

வடகாடு பகுதிகளில் கடந்த மாதங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனை ஆகி வந்த நிலையில், தற்போது 3 கிலோ ரூ.50-க்கு சரக்கு வேன் மூலமாக, வீதி, வீதியாக வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

இதே தக்காளி கடந்த மாதங்களில் நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக கடும் விலை உயர்வு பெற்று பொதுமக்கள் பலரும் தக்காளிக்கு பதில் புளியை பயன்படுத்தி சமையல் செய்து வந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் தக்காளி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பலரும் கோடீஸ்வரர் ஆக மாறியது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரக்கு வேனில் விற்பனை

தற்போது தமிழகத்தில் சேலம், திண்டுக்கல், தேனி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் விளைச்சல் கண்டுள்ள தக்காளி பழங்கள் விலை வீழ்ச்சி கண்டு இருப்பதால் பல்வேறு பகுதிகளில் வீணாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் இவற்றை மலிவு விலைகளில் வாங்கி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் வியாபாரிகள் சரக்கு வேன் மூலமாக தக்காளி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்