சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-24 18:45 GMT

நாகர்கோவில்,

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் இன்சூரன்ஸ்

குமரி மாவட்டம் பொன்மனையை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவர் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருந்தார். பாலிசி முடிவடைந்த பின்னர் அதற்கான முதிர்வுத் தொகையை கேட்டு இன்சூரன்ஸ் குறைதீர்மைய அலுவலகத்திலும் புகார் அளித்தார். ஆனாலும் ராஜேந்திர பிரசாத்துக்கு முதிர்வடைந்த தொகையில் ஒரு பகுதி பணம் கிடைக்கவில்லை.

எனவே வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திர பிரசாத் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம், முதிர்வுத் தொகையின் பகுதி பணமான ரூ.26,916 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.46,916-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்