மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-04 19:30 GMT


வால்பாறை


மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


பரவலாக மழை


கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை. இருப்பினும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தேயிலை செடிகள் துளிர்விட்டு பச்சை பசேலேன காட்சி அளிக்கிறது.


இதேபோல் அவ்வப்போது வால்பாயைில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்துவிழுந்து வருகின்றன.


மரம் விழுந்தது


இந்தநிலையில் நேற்றும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் பி.ஏ.பி. காலனி அருகில் நேற்று மதியம் 1 மணியளவில் சாலையோரத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதன்காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதோடு அணிவகுத்து நின்றது. மரம் விழும் போது வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இது குறித்து தகவலறிந்ததும் சம்பவயிடத்திற்கு வந்த வால்பாறை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மின் அறுவை எந்திரம் கொண்டு மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னா் போக்குவரத்து சீரானது. இதையடுத்து அரசு பஸ், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாசிகளின் வாகனங்கள் அங்கிருந்து சென்றன.மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்