நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

Update: 2022-06-25 22:23 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,492 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.57 அடியாக இருந்தது.

நேற்று காலை 8 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 844 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.54 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்