வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்பனை

வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது

Update: 2023-05-06 20:56 GMT


மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, விளாத்திகுளம், ஒட்டன்சத்திரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற இடங்களில் இருந்தும், குஜராத், மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சீசனை பொறுத்து தினமும் 15 டன் முதல் 20 டன் வரை முருங்கைக்காய் விற்பனைக்காக வருகின்றன. சீசன் இல்லாத சமயத்தில், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை செல்லும். தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காய் சீசன் தொடங்கி இருப்பதால் அதன் விலை குறைந்துள்ளது. கடந்த 10 தினங்களாகத்தான் மழை பெய்கிறது. இதனால் வரும் நாட்களில் முருங்கைக்காய் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்