தொடர் மழையால் மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தொடர் மழையால் மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 300 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Update: 2022-08-07 16:35 GMT

திருப்பத்தூரில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதி 2-ல் உள்ள வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது. இதே போன்று 15-வது வார்டு பாரதிதாசன் நகரில் சுமார் 100 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேசன், மீட்பு குழுவினருடன் சென்று மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

தண்ணீர் புகுந்த வீடுகளில் இருந்து சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா உணவு, போர்வை, வழங்கினார். தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 3 ஏரிகள் 75 சதவீதம் வரை 3 ஏரிகளும், 8 ஏரிகள் 50 சதவீதமும், 17 ஏரிகள் 20 சதவீதமு நிரம்பி உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்