கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் நர்சிங் மாணவி தற்கொலை பூதப்பாண்டி அருகே சோகம்

பூதப்பாண்டி அருகே கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-16 18:54 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவி

பூதப்பாண்டி அருகே ஞானத்தை அடுத்துள்ள அந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். தொழிலாளி. இவருடைய மகள் சுபிதா கிரேஸ் (வயது 21). இவர் திடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். தேவதாஸின் மகன் சுஜின் ராஜ் (26) டிரைவராக பணிபுரிந்தார்.

கடந்த ஒரு வாரமாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. அதாவது அவர் கல்லூரி கட்டணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தற்கொலை

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் வீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரிக்கான கட்டணம் கட்ட முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்