செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி - முகப்பு விளக்கை எரிய விட்ட படி சென்றனர்

செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். முகப்பு விளக்கை எரிய விட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர்.

Update: 2022-11-25 09:44 GMT

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள சூழ்நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. நேற்று செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த பனிமூட்டம் காணப்பட்டது.

வழக்கமாக மார்கழி மற்றும் தை மாதத்தில்தான் பனிமூட்டம் காணப்படும் ஆனால் தற்போது மார்கழி மாதம் போல் கார்த்திகை மாதத்திலேயே பனிமூட்டத்துடன் காணப்பட்டது.

செங்கல்பட்டு புறவழிசாலை, செங்கல்பட்டு - காஞ்சீபுரம் செல்லும் சாலை, பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் போன்ற பகுகளிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால்

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.

காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ராஜகுளம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பரந்தூர், கீழம்பி, தாமல், ஒலி முகமது பேட்டை, வாலாஜாபாத், மாகரல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலும் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்