குடும்ப தகராறு காரணமாக தள்ளுவண்டி வியாபாரி தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக தள்ளுவண்டி வியாபாரி தற்கொலை

Update: 2022-10-11 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள லட்சுமாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக நித்யா கணவரை பிரிந்து மடத்துக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சரவணன் விஷம் குடித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்