மகள், மருமகன் கொடுமைப்படுத்துவதால் 'கருணை கொலை செய்யுங்கள்' : கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி மனு

மகள், மருமகன் கொடுமைப்படுத்துவதால் கருணை கொலை செய்யுங்கள் என்று கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி மனு கொடுத்தார்.

Update: 2022-11-26 18:45 GMT

உத்தமபாளையம் அருகே உள்ள புலிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 62). இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில், "எனது கணவர் 25 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். நான் தனியாக வசித்து வருகிறேன். எனது மகளும், மருமகனும் என்னை கொடுமைப்படுத்துகின்றனர். எனது வீட்டில் புகுந்து என்னை தாக்கி 3 பவுன் நகையை எடுத்துச் சென்று விட்டனர். எனவே நான் சேர்த்து வைத்த வீட்டை அரசே எடுத்துக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கு பயன்படுத்தவும், என்னை கருணை கொலை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்