விழிப்புணர்வு காரணமாக விபத்துகள் குறைந்தது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு காரணமாக விபத்துகள் குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2023-04-18 18:30 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 76 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துகளில் 23 பேர் இறந்துள்ளனர். 69 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளை குறைப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பான்கள் மற்றும் ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் போக்குவரத்து கூம்புகள் வைக்கப்பட்டது. மேலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிவதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நடவடிக்கைகள் மூலமாக மார்ச் மாதத்தில் சாலை விபத்து வழக்குகள் 40 ஆக குறைந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆகவும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகவும் குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்