ரூ.2,500 பாக்கி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த வியாபாரி தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரூ.2,500 பாக்கி வைத்ததாக தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில், ஜெயபால் என்பவரது கடையில் கடந்த 5 ஆண்டுகளாக காய்கறி எடுத்து மூன்று சக்கர வாகனத்தில் வியாபாரம் செய்து வந்தார். தேவேந்திரன், 2 ஆயிரத்து 500 ரூபாய் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காய்கறி வாங்க வந்திருந்த தேவேந்திரனிடம், பாக்கி பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மூன்று சக்கர வாகனத்தை பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவேந்திரன், பூச்சி மருந்து விஷத்தை குடித்து, நடந்தவற்றை செல்போன் மூலம் தனது மகனுக்கு தெரிவித்துவிட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.