மர்மமான முறையில் வாத்து, கோழிகள் சாவு
ஆம்பூர் அருகே மர்மமான முறையில் வாத்து, கோழிகள் இறந்தது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கசத்தோப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆடு, மாடு மற்றும் கோழி, வாத்து உள்ளிட்டவைகளை வளர்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று தங்கள் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள குட்டையின் அருகே கிருஷ்ணவேணி மற்றும் அமுதா ஆகியோருக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் இறந்து கிடந்தன.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.